பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Batticaloa
Sri Lankan Peoples
Ministry of justice Sri lanka
By Dilakshan
மாவீரர் தின நிகழ்வின் போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த 4 பேர் இன்று வாழச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவர்களின் விபரம் அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கைது செய்யப்பட்டவர்களின் கோப்புக்கள் அனுப்பப்பட்டு பரிசீலிக்கப்பட்டதை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிணை வழங்கியவர்களில் வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ள ஒரு மாணவர் உட்பட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிணையி்ல் விடுதலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் 26, 27ம் திகதிகளில் மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்