யாழில் நிலவும் சீரற்ற காலநிலை: சென்னைக்கு அனுப்பப்பட்ட விமானம்
Jaffna
Sri Lanka
India
By pavan
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று (19) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பியுள்ளது.
30 நிமிடங்கள்
குறித்த விமானம் இன்று 11.40 ற்கு தரையிறக்க வேண்டிய நிலையில் சீரற்ற வானிலை காரணமாக வானில் 30 நிமிடங்களுக்கு மேலாக பறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சென்னைக்கு திரும்பி சென்றதாகவும் விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்

உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்…
3 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி