அமெரிக்காவின் உதவித் திட்டத்தில் சிறிலங்கா - பிரதமர் வெளியிட்ட தகவல்
Dinesh Gunawardena
Sri Lanka
United States of America
By Beulah
அமெரிக்காவின் சர்வதேச மருத்துவ உதவி திட்டத்தால் சுமார் 1380 கோடி ரூபாய்(4.6 கோடி டொலர்) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அடுத்த மாதம் அளவில் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் என இந்த திட்டத்தின் செயற்பாட்டு பணிப்பாளர், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக அவசரகால மருந்துகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ செயற்பாடு
சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவ தன்னார்வத்துடன் செயல்படும் குறித்த நிறுவனத்தைப் பாராட்டிய பிரதமர், இந்நிறுவனம் நாட்டுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்