கரும் புகையில் சூழ்ந்த அமெரிக்கா: பற்றி எரிந்த வனப்பகுதி
United States of America
World
By Dhilak
அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் காணப்படும் வனப்பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்து கரும்புகை சூழ்துள்ளது.
குறித்த தீவிபத்தினால், அந்த பகுதியில் உள்ள 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து நாசமாகியுள்ளதுடன் இதுவரை 10 பேர்வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு
அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு பிரிவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, தீ பரவுவதை தடுப்பதற்காக விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.
மக்கள் பாதுகாப்பு
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி