ரஷ்யாவுடன் ப்ரொக்ஸி போரை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது - வட கொரியா கண்டனம்!
Russo-Ukrainian War
United States of America
North Korea
Ukraine
Russian Federation
By Pakirathan
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை தடுக்க தொடர்ச்சியான ஆயுத உதவிகளை உக்ரைன் க்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.
இந்தநிலையில், ரஷ்யா இராணுவத்தை எதிர்த்து தாக்கும் போர் டாங்கிகளை உக்ரைன் க்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.
அமெரிக்காவின் குறித்த ஆயுத உதவிக்கு வடகொரியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
வடகொரியா கண்டனம்
உக்ரைனுக்கு இராணுவ தளபாட உதவிகளை அமெரிக்கா வழங்குவதன் மூலம், போர் நிலைமை அதிகரிக்குமே தவிர குறையாது என அதிபர் கிம் ஜொங் உன்னின் சகோதரி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி, நிலைமையை மேலும் தீவிரமாக்க அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மொஸ்கோவை அழிக்க திட்டமிடப்பட்ட “ப்ரொக்ஸி போரை” அமெரிக்கா தீவிரமாக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி