அமெரிக்காவின் போர்ச் செலவுகளை மறைக்கும் பென்டகன் : கிறிஸ் மர்பி குற்றச்சாட்டு
ஈரானுடனான அமெரிக்காவின் போர்ச் செலவுகள் மற்றும் சேதங்களை பாதுகாப்புத்துறை (பென்டகன்) மறைக்க முயற்சிப்பதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டரான கிறிஸ் மர்பி குற்றம் சாட்டியுள்ளார்.
கிறிஸ் மர்பிக்கு அமெரிக்க இராணுவத் தளங்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம் தர மறுப்பு
இங்கு கருத்து தெரிவித்த அவர், அப் பகுதி பாதுகாப்பற்றது என அதிகாரிகள் தன்னிடம் கூறியது பொய்யானது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிர மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தான் அங்குள்ள அமெரிக்க தளங்களைப் பார்வையிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

இது பாதுகாப்பு தொடர்பான விவகாரம் அல்ல. இது உண்மைகளை மறைக்கும் முயற்சி எனக் கூறிய அவர், அப் பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அமெரிக்கத் தூதரக சேத விபரங்களை விளக்கக்கூட மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
தூதரகத்தில ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய வெளியுறவுத்துறை தனக்கு அனுமதி அளித்ததாகவும் அந்தச் சேதங்கள் மிகப் பெரிய அளவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் இரவில் நடைபெற்றது. அது பகல் நேரத்தில் நடந்திருந்தால், ஏராளமான அமெரிக்கர்கள் உயிரிழந்திருப்பார்கள் எனவும் அவர் நேர்கணாலில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |