சவுதியைத் தாக்கிய ஹூதி : இலங்கைக்கான விமான சேவைகள் அவசரமாக இடைநிறுத்தம்
சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கான தனது விமான சேவைகளை நாளை (10) வரை இரத்துச் செய்வதற்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று (9) மற்றும் நாளை (10) ஆகிய இரண்டு தினங்களிலும் ரியாத்துக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளே இந்தத் தீர்மானத்துக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
300க்கும் மேற்பட்ட விமானங்கள்
இந்த நிலையில் ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸின் UL 265 இலக்க விமான சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ரியாத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்து, இன்று (09) அதிகாலை நாட்டை வந்தடையவிருந்த UL 266 இலக்க விமான சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ரியாத் நகரை நோக்கிச் செல்லும் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |