இருநாட்டு மோதலுக்குள் அரசியல் ஊடுருவல்: இஸ்ரேலுக்கு சார்பாக காய் நகர்த்தும் அமெரிக்கா!
ஈரான் மீதான இஸ்ரேலின் தற்போதைய தாக்குதலை மேற்குலங்கள் ஊதி பெரிதாக காட்டினாலும் உண்மையில் குறித்த தாக்குதல் இஸ்ரேல் தன்னை பலவீனமாக கட்டிக் கொள்வதாகவே அமைகின்றது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈரான் மீது இஸ்ரேல் தாக்கும் என்று அனைவரும் தெரிவித்த போது இஸ்ரேலின் தாக்குதல் வீரியமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
தற்போதைய தாக்குதல்
அத்தோடு இஸ்ரேல் தாக்குதல் மேற்கொள்ளவதற்கு இரண்டு தினங்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் அமெரிக்கா ஈரானுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, இஸ்ரேலானது மறைமுகமாக தங்கள் மீது ஒரு தாக்குதலை மேற்கொள்ளும். இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளாமல் அந்த தாக்குதலை ஈரானை அனுமதிக்குமாறு கோரி பதிவிடப்பட்டிருந்தது.
இந்த மோதல்களில் நிறைய அரசியல் இருப்பதோடு இவை இழந்த மானத்தை காப்பாற்றுவது போல உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காணலாம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |