டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : நாடாளுமன்றில் பைடன் ஆவேசப்பேச்சு
டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று டிரம்பை கடுமையாக சாடி நாடாளுமன்றில் தனது உரையினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பைடனின் இந்த உரை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை, அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றை மையப்படுத்தி நாடாளுமன்றில் அதிபரால் நிகழ்த்தப்படும் ஒருங்கிணைந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு பேசியிருந்தார்.
மணிநேர உரை
ஒரு மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த உரையில் பைடன், ரஷ்ய அதிபர் புடினையும் விட்டுவைக்காமல் கடுமையாக சாடியிருந்தார்.
டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினிடம், "நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என கூறுகிறார்.
இடையேயான போட்டி
ரஷ்ய அதிபரிடம் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறலாமா இது ஆபத்தானது, புடின் உக்ரைனுடன் நிறுத்தி கொள்ள மாட்டார். நாம் உக்ரைனுக்கு தேவைப்படும் ஆயுத உதவி வழங்கினால் புடினை நிறுத்த முடியும், என்றார், தவிரவும் நான் புடினுக்கு அஞ்ச மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்காவில், அமெரிக்காவை கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல நினைப்பவர்களுக்கும், எதிர்காலத்தில் நிலைநிறுத்த நினைப்பவர்களுக்கும் இடையேயான போட்டி நடைபெறுகிறது என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |