மகளிர் தினத்தன்று வெளியான நற்செய்தி : பெண்களுக்காக சட்டமூலங்களை அறிமுகப்படுத்த அரசு தீர்மானம்
பெண்களின் உரிமைகள் மற்றும் பொருளாதார வலுவூட்டலை உறுதி செய்யும் இரண்டு புதிய சட்டங்கள், அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் நன்னாளான இன்று (08) அரசாங்கம் இந்த அறிவிப்பினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இன்று (08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள விடயத்தை எடுத்தியம்பினார்.
உத்தியோகபூர்வமாக வர்த்தமானி
மேலும் இந்த சட்டமூலங்கள் எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
தவிரவும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமானது நேற்றைய தினம் (07) உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாலின சமத்துவ சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |