அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட மோசம்..! தீவிரத்தின் உச்ச நிலையடைந்த புளோரிடா
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
மணிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் பல நகரங்கள் மோசமான நிலையில் காணப்படுகிறன.
இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது. மீட்புப் பணிகளில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டனர் என புளோரிடா மாகாண ஆளுநர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்தார்.
இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. மொத்தத்தில் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது.
அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி

இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய இயான் புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50க்கு மேல் அதிகரித்துள்ளது.
தேச வரலாற்றில் மிக மோசம் என்ற அளவிலான தரவரிசையில் இந்த சூறாவளி புயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது புளோரிடாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி அல்ல, அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட்டு பேரழிவை ஆய்வு செய்ய ஜோ பைடன் எதிர்வரும் 05 ஆம் திகதி புளோரிடா செல்ல உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.