அமெரிக்காவை தாக்கும் கடும் புயல் - அவசர நிலையை அறிவித்தார் அதிபர் ஜோ பைடன்!
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த காலங்களில் பெய்த கன மழை காரணமாக கடுமையான புயல் வீச ஆரம்பித்துள்ளது, இதனால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள கரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி ஆகிய நகரங்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் வீழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அவசர நிலை
பலர் வாழ்விடங்களை இழந்துள்ளடன், இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மீட்பு குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புயலின் தாக்கத்தால் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த நெருக்கடியை சமாளிக்க மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணி விரைவாக இடம்பெற்று வருகின்றது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)