அமெரிக்காவில் நடந்த துயரம்..! பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு - மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
United States of America
By pavan
துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 பேர் காயமடைந்தனர் என விர்ஜீனியா பல்கலைக்கழக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்றிரவு நடந்த இந்தத் தாக்குதலை நடத்தியவர் பல்கலைக்கழக மாணவர் கிறிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என பல்கலைக்கழக நிர்வாக தலைவர் ஜிம் ரியான் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகம்
சந்தேகிக்கப்படும் குற்றவாளியான அவரது புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டு, தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி