ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால்: வடகொரியாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
Vladimir Putin
United States of America
North Korea
Kim Jong Un
Russia
By Sumithiran
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இதற்காக அவர் ரஷ்யாவிற்கு சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால்
இந்த நிலையில், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச சமூகத்தில் இதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறினார்.
YOU MAY LIKE THIS