ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடன் கூட்டணி வைப்பேன்..! அமெரிக்க வேட்பாளர் பகிரங்கம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் என தனது தேர்தல் பரப்புரையில் அதிபர் வேற்பாளர் நிக்கி ஹாலே தெரிவித்தார் .
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்ற பரபரப்பில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இங்கே அதிபர் வேட்பாளர் யார் என்ற முடிவே பெரும் பேசுபொருளாக அமெரிக்காவின் குடியரசு கட்சியில் நிலவி வருகிறது.
குறிப்பாக, குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் நான் தான் என்று டொனால்டு டிரம்ப் மற்றும் நிக்கி ஹாலே இடையே வலுவான போட்டி நிலவி வருகிறது.
கூட்டணியை வலுப்படுத்துவேன்
இதில் யார் அதற்கான சரியான தேர்வு என்பதை உறுதியாக்கும் வண்ணம் இருவரும் தங்கள் பிரச்சாரங்களை காரசாரமாக நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், நான் அதிபரானால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் என நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிக்கி ஹாலே மேலும் தெரிவிக்கையில், "டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தெரிவானால், பல விடயங்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன், அவற்றில் ஒன்றுதான் மற்ற நாடுகள் உடனான கூட்டணி." என்றார்.
கொள்கைகள் மற்றும் கருத்துக்கள்
நான் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டால், நேட்டோ உடனான கூட்டணியை மேலும் வலுப்படுதுவேன் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் உடனான கூட்டணியையும் வலுப்படுத்துவேன்,எங்களுடன் அனைவரையும் சேர்த்துக் கொள்வோம், இது அமெரிக்காவிற்கு அதிக நண்பர்களை ஈட்டித்தரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆனால் இது டொனால்டு டிரம்ப் இனால் சாத்தியப்படாது என அவரது கொள்கைகள் மற்றும் கருத்துக்களை மேற்கோள்காட்டி நிக்கி ஹாலே கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |