நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு சென்ற அமெரிக்க தூதுவர்
Nuwara Eliya
V S Radhakrishnan
Julie Chung
By Sumithiran
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், நுவரெலியா சீதாஎலியா அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்தார்.
ஆலய நிர்வாக சபையின் அழைப்பின் பேரில் அமெரிக்கத் தூதுவர் இன்று (07ஆம் திகதி) காலை ஆலயத்திற்கு வருகை தந்ததையடுத்து, ஆலய பரிபாலன சபைத் தலைவர் பி.எம்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் தூதுவரை இந்து முறைப்படி வரவேற்றனர்.
சீதையம்மன் கோவிலில் சிறப்பு ஆசி
வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் சீதா எலிய சீதையம்மன் கோவிலில் அவருக்கு சிறப்பு ஆசி வழங்கும் நிகழ்ச்சியும், விழா முடிந்ததும் துருக்கியில் நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
நினைவுப் பரிசில்
நுவரெலியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சீதாஎலியா சீதைஅம்மன் ஆலயத்திற்கு வருகை தந்ததை நினைவு கூரும் வகையில் ஆலய நிர்வாக சபையினால் நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி