திருக்கேதீஸ்வரத்தில் வழிபட்ட அமெரிக்க தூதுவர்
மன்னாருக்கு விஜயம் செய்த அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜூலி சங் பாரம்பரியம் மிக்க இந்துக் கோவிலான திருக்கேதீஸ்வரத்திலும் வழிபாட்டை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
இந்த முக்கியமான பூசை நாளில் என்னை வரவேற்ற ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகத்தினரை மனதாரப் பாராட்டுகிறேன்.
மறக்க முடியாதது
Deeply appreciate Mr. Ramakrishnan and the temple administration welcoming me on this important Pooja day. What a memorable visit to Thiruketheeswaram Hindu Temple in Mannar, one of the most venerated Hindu Temples in Sri Lanka, with a 2,500-year tradition and history. pic.twitter.com/pvqLEk9gVv
— Ambassador Julie Chung (@USAmbSL) August 25, 2023
2,500 வருட பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் மிகவும் போற்றப்படும் இந்துக் கோயில்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வரம் இந்துக் கோயிலுக்குச் சென்றது மறக்க முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.