ஈராக்கிய மிலிட்டியாக்களால் தாக்கப்பட்ட அமெரிக்கப் படைகள்! அதிர்ந்த எல்லை தாண்டிய ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பிறகு, முதல் முறையாக எல்லை தாண்டிய ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
ஈராக்கின் மொசுல் அருகே உள்ள ரபியா (Rabi'a) பகுதியிலிருந்து குறைந்தது 7 ஏவுகணைகள் வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் நிலைபெற்ற ர்மீலான் (Rmeilan) தளத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளன.
ஈராக்கிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தபடி,
“இந்தத் தாக்குதல் ஈரான் ஆதரவு ஈராக்கிய மிலிட்டியாக்களால் (pro-Iranian Iraqi militias) நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஏவுகணைகள் ஏவப்பட்ட இடத்தில் ஒரு எரிந்த லாரியின் மீது பொருத்தப்பட்ட ஏவுகணை லான்ச்சர் பிளாட்ஃபார்ம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது அராஷ்-4 (Arash-4) வகை மேம்படுத்தப்பட்ட ஏவுனணைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிரிய இராணுவம் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. ஹசாகா (Hasakah) பகுதியில் உள்ள ஒரு இராணுவத் தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக அது தெரிவித்துள்ளது.
ஆனால், அந்தத் தளம் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படுவதை அது குறிப்பிடவில்லை. உடனடியாக உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.