பறந்துகொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த அமெரிக்க விமானம்! விமானிகளுக்கு ஏற்பட்ட நிலை
பயிற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் தீப்பிடித்ததால் அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேறி, பாராசூட் மூலம் குதித்து உள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லேக் ஒர்த் நகரில் இராணுவ விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்துள்ளனர். இதன்போது பயிற்ச்சியில் ஈடுபட்ட 2 விமானிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் 3 வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
விமானிகளில் ஒருவர் தரையில் கிடந்து உள்ளார். மற்றொருவரின் பாராசூட் மின்வயரில் சிக்கியதால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. ஒயர்களுக்கு இடையே சிக்கி இருந்துள்ளார்.
காயமடைந்த விமானிகள் இரண்டு பேரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.