நாளை விண்வெளிக்கு பயணமாகும் அமெரிக்க பாடகி
அமெரிக்காவில் (USA) பிரபல பாடகி உட்பட 6 பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், விண்வெளி ஆராய்ச்சியாளர் அமாண்டா குயேன் மற்றும் அமேசன் நிறுவனர் ஜெப் பெசாசின் வருங்கால மனைவியும், செய்தி தொகுப்பாளருமான லாரன் சான்செஸ் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
விண்வெளி சுற்றுலாவிற்காக தொடங்கப்பட்ட தொழிலதிபர் ஜெப் பெசாசின் 'புளூ ஆரிஜின்' நிறுவனத்திற்கு சொந்தமான 'நியூ ஷெப்பார்டு' விண்கலம் மூலம் இந்த குழுவினர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.
விண்வெளி பயணம்
இந்நிலையில், குறித்த விண்கலம் நாளை (14) வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
மேலும், பூமியின் வளிமண்டலத்தை தாண்டி விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசையற்ற நிலையை உணர்ந்த பிறகு இந்த குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
