முரண்பாடுகளுக்கு மத்தியில் சீனா சென்றடைந்த அமெரிக்க உயர்மட்ட தலைவர்
Xi Jinping
United States of America
China
By Sumithiran
முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் இன்று (18) சீனாவின் தலைநகர் பீஜிங்கை வந்தடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"உளவு" பலூன் விவகாரம்

கடந்த பெப்ரவரி மாதம் இந்த பயணத்தை திட்டமிட்டிருந்த அவர், சீனாவால் ஏவப்பட்ட "உளவு" பலூன் காரணமாக அதை ஒத்திவைத்தார்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் பல்வேறு காரணங்களால் முரண்படுகின்றன.
ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு

2021 ஜனவரியில் அதிபர் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு, சீனாவிற்கு விஜயம் செய்யும் முதல் அமெரிக்க அரசாங்க அதிகாரி பிளிங்கன் ஆவார்.
சீனாவில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 23 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி