மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு!
மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதென அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில், கடற்றொழிலாளர்களுக்கு மன்னிப்பு மற்றும் பொது மன்னிப்பு கோரி தூதரகம் பல கோரிக்கைகளை முன்வைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார (Janaka Bandara) தெரிவித்தார்.
இதேவேளை மியன்மார் பிரதமரையும் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்ததாகவும், அதன்படி அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
15 இலங்கை பிரஜைகள்
அதன்படி இன்னும் சில நாட்களில் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப தூதரகம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் பாரம்பரிய புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு அந்நாட்டு மாநில நிர்வாக ஆணையகம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.
அவர்களில் 13 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 15 இலங்கை பிரஜைகள் உட்பட 3,303 மியன்மார் பிரஜைகளும் 36 வெளிநாட்டு கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை கடந்த டிசம்பரில், இந்த குழு மியன்மார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |