இந்தியாவிலிருந்து வந்த யூரியா - வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விநியோகம்
இந்திய கடன் திட்டத்தின் கீழ் யூரியா
யால பருவ பயிர்ச்செய்கைக்காக அரசாங்கத்தினால் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட யூரியா உர விநியோகம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஊவா மாகாணம் 2122 மெட்ரிக் தொன், மேல் மாகாணம் 1041 மெட்ரிக் தொன், மத்திய மாகாணம் 2138 மெட்ரிக் தொன், வடமேல் மாகாணம் 3767 மெட்ரிக் தொன், சப்ரகமுவ மாகாணம் 1128 மெட்ரிக் தொன், தென் மாகாணம் 4728 மெட்ரிக் தொன், வடக்கு மாகாணம் 877 மெட்ரிக் தொன், கிழக்கு மாகாணம் 3934 மெறிறிக் தொன் விநியோகிக்கப்பட்டது.
விவசாய அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்ட தகவல்
இதன்படி, 304,734 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட 490,515 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள யூரியா உரத்தின் மொத்த அளவு 29,740.73 மெட்ரிக் தொன் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொட, இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய 65 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இரண்டு கட்டங்களாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

