அம்பாறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்
Tamils
Ampara
Sri Lankan Peoples
By Dilakshan
அம்பாறை (Ampara) மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்றையதினம் தம்பிலுவில் மத்திய சந்தையில் இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டம், அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோரிக்கை
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களானது, கடைசி முன்று நாட்களும் நாட்டில் உள்ள எட்டு மாவட்டகளில் இடம்பெறவுள்ளதுடன் இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

போராட்டத்தில் என் பிள்ளைகள் எங்கே மற்றும் குழந்தைகளை தேடி நீதி கேட்ட எங்கள் உயிர்கள் மாய்கின்றது Omp TRC வேண்டாம் உயிருடன் பிடித்து செல்லப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரி நின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 54 நிமிடங்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்