சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் - அம்பாறையில் கலந்துரையாடல்(படங்கள்)
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மதகுருமார் ,உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பல தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர்.
வலுச்சேர்ப்பதற்கான சந்திப்புகள்
போராட்டத்தின் இறுதி நாள் மட்டக்களப்பிற்கு வடக்கிலிருந்து திருகோணமலையினூடாக வரும் எழுச்சி பேரணியுடன் அம்பாறையிலிருந்தும் ஆர்பாட்ட பேரணி வருகைதரவுள்ளது.
மேலும் இதனைதொடர்ந்து நாளைய தினம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்கான சந்திப்புகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
