காவல்துறையினரின் விசேட சோதனை! 100இற்கும் மேற்பட்டோர் சிக்கினர் (காணொளி)
அம்பாறை பிராந்தியத்தில் இன்று காலை முதல் மதியம் வரை போக்குவரத்து காவல்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துளளார்.
இந்தச் சோதனை நடவடிக்கையானது கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு மற்றும் சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, மதுபோதையில் வாகனம் செலுத்துவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் முகக்கவசம் அணியாது சென்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் காவல்துறையினரினால் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையானது கொரோனா தாக்கத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பின்னர் இன்று அம்பாறை மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் ஆலோசனையின் படி கல்முனை காவவல்துறை நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன தலைமையில் கல்முனை காவல்துறை நிலைய போக்குவரத்து காவல்துறை முக்கிய சந்திகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது 100 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.