கச்சத்தீவு குறித்து இந்திய அரசுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதா!
இந்தியா வழங்கியுள்ள கடனை இரத்துசெய்துகொள்வதற்காக இலங்கையின் வடக்கு கடல் எல்லை மற்றும் கச்சதீவு பகுதி உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் அந்நாட்டுடன் அரசு ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதா என்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மீனவர்களுக்கு வடபகுதிக்கு வருவதற்கு ‘பாஸ்’ நடைமுறை வழங்குவது தொடர்பில் பேச்சு நடத்தப்படுகின்றது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன இந்திய ஊடகமொன்றுக்கு அறிவித்திருந்தார்.
அதேபோல இலங்கைக்கு கக்கதீவை வழங்குவதற்கு இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கை வரலாற்று தவறு என இந்திய பிரதமர் அண்மையில் அறிவித்ததையும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது.
இந்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவிற்கும் சென்றிருந்தார்.
எனவே, வடக்கு கடல் எல்லை குறித்தும், கச்சதீவு குறித்தும் இந்திய கடனை இரத்துசெய்துகொள்வதற்காக ஏதேனும் உடன்பாட்டுக்கு வந்துள்ளார்களா? என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகள் இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பில் ,
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்