உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சாகர
ராஜபக்ச குடும்பத்தின் பிரதம சட்ட ஆலோசகரும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளருமான சட்டத்தரணி சாகர கரியவசம், பல நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் மிகுந்த உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, அவர் தூதர்களைச் சந்தித்து, இவ்விஷயத்தில் கவனம் செலுத்தித் தலையிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இருப்பினும், சாகர கரியவசம் அவர்களின் கேள்விக்குப் பதிலளித்த தூதரக அதிகாரிகள், அத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்து நம்பகமான சுயாதீனத் தகவல் எதுவும் பதிவாகவில்லை என்று கூறியுள்ளனர்.
கடுமையான குற்றங்கள்
மாறாக, நாட்டில் நிகழும் கடுமையான குற்றங்கள் குறித்த விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு வருவதாகப் பல சுயாதீன நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் பொதுவாகக் கூறியுள்ளனர்.

இதன்படி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதே சாகர கரியவசம் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டு என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்