தொடரும் கிரிக்கெட் நிறுவன சர்ச்சை : உச்ச நீதிமன்றை நாடுகிறார் விளையாட்டுத்துறை அமைச்சர்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக தனியார் சட்டத்தரணிகள் குழுவுடன் தொடர்பு கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக
மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யுமாறு எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளரான கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைக்கால நிர்வாக சபைக்கு தடை
அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிர்வாக சபையை அமைத்திருந்தார்.
ஆனால் அதற்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால நிர்வாக சபைக்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.