முல்லைத்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த யானையின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Mullaitivu
Sri Lanka
By Raghav
முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (02.08.2024) அதிகாலை யானையின் சடலம் இருப்பதாக விவசாயிகள் அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள்
அத்துடன், யானையின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் யானையின் இறப்பு தொடர்பான காரணத்தை மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்