பல்வேறு தடைகளை தாண்டி வைராக்கியத்தோடு வாழும் முன்னாள் போராளி - உறவுப்பாலம்
Jaffna
Uravuppalam
By Sumithiran
தேசத்தை மீட்பதற்கு தன்னை அர்ப்பணித்த நிலையில் போர் முடிவடைந்து குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்று வந்த நிலையில் கணவரும் கைவிட்டுச் சென்ற போதும் தனது இரண்டு மகன்களுடன் தனியே வாழ்கிறார் இந்த முன்னாள் போராளியான பெண்.
அதிகாலைவேளை கடற்கரைக்குச் சென்று கரைவலை இழுத்து அதில் கிடைக்கும் மீன்களை கொண்டு வந்து கருவாடு ஆக்கி விற்று தனது வருமானத்தை ஈட்டுகின்றபோதிலும் அந்த வருமானம் போதுமானதாக இல்லை.
இவ்வாறு அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்தும் இந்த முன்னாள் போராளியின் நிலையை நீங்களே காணுங்கள் நேயர்களே....
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363