ரணில் கைது : இந்தியாவிலிருந்து வெளிவந்த கவலை
India
Ranil Wickremesinghe Arrested
By Sumithiran
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.
சிறிய குற்றச்சாட்டுக்காக தடுத்து வைப்பு
ஒரு எக்ஸ் குறிப்பை வெளியிட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறிய குற்றச்சாட்டுகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, பல தசாப்தங்களாக தேசத்திற்கு சேவை செய்த முன்னாள் ஜனாதிபதியை உரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இருப்பினும், இது இலங்கையின் உள் விவகாரம் என்பதால், அதை முழுமையாக மதிக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 13 மணி நேரம் முன்
