முஸ்லிம் விவாகரத்துச் சட்டம்: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதம்

Anura Kumara Dissanayaka Vijitha Herath Harini Amarasuriya General Election 2024
By Shadhu Shanker Nov 11, 2024 07:53 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம்  விவாகரத்துச் சட்டம் திருத்தம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் 135 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், 18 சிவில் அமைப்புக்களும், இணைந்து திறந்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், “அரசு முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை கௌரவிக்கவும் பாதுகாக்கவும் பொறுப்புடையது. நீங்கள் செயலற்றவர்களாக இருக்கப் போகின்றீர்களா? 

அண்மையில் வெளிவந்த காணொளி ஒன்றில், அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath), 1951ம் ஆண்டு 13ம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்தத் தேவையுமில்லை என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தச் சட்டம் தொடர்பாக கூறப்படும் கருத்துக்களை கருத்துக்களாக மாத்திரம் பார்ப்பதாகவும், கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

லொஹான் ரத்வத்தவின் பிணை மனு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

லொஹான் ரத்வத்தவின் பிணை மனு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்

கருத்தாழமற்ற இவருடைய பேச்சினால் முஸ்லிம் விவாவக விவாகரத்துச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள், அச்சட்டத்தை திறுத்தத்திற்கு உள்ளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் விவாகரத்துச் சட்டம்: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் | An Open Letter To President Anura Pm Harini

காரணம் வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியலமைப்பு உறுப்புரை 12 உப பிரிவு 1 இலங்கை மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சரி சமமானவர்கள் என்று கூறுகின்றது.

அத்துடன் இவ்வடிப்படை உரிமையானது எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் என்ற வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை நீதமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் படி அரசின் பொறுப்பாகும்.

இந்த அரசியலமைபினூடனான அடிப்படை மனித உரிமை அறிவுறுத்தலானது அரசு ஏற்றுக் கொள்ளாமல் பொறுப்பை அரசாங்கம் மதத் தலைவர்கள் மீது சாட்டுவது அரசு தன் கடமையில் இருந்து விலகுவதாக நாங்கள் கருதுகின்றோம்.

( தேசிய மக்கள் சக்தி) NPP அரசு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாரபட்சங்களை சரிகாணும் நிலைப்பாட்டில் இருக்குமாயின் தற்போது அமுலில் இருக்கும் இந்த பாராபட்சமான சட்டத்தின் குறைபாடுகளால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன முறைமைகளைக் கையாளப் போகின்றது?

மேற்குறித்த அரசியலமைப்பு கோட்பாடுகளின் பிரகாரம், சமூகத்தில் உள்ள இளவயது திருமணங்களையும், பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களையும் தடுத்து குடும்ப வாழ்வுகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை குறித்து வெளியான அறிவிப்பு

பொறுப்பற்ற கருத்து 

மேலும் ஒரு வரைமுறை இல்லாத பலதாரமணக் கோட்பாட்டில் சிக்கித் தவிக்கும் மனைவிகளையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது? மேலும் ஆணாதிக்க கட்டமைப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது பெண்களை எந்த வகையிலும் உள்வாங்க முடியாத அளவு பாராபட்சத்தை வெளிபடுத்திக் கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் விவாகரத்துச் சட்டம்: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் | An Open Letter To President Anura Pm Harini

குறிப்பாக காதிகள் முறைமை பெரும்பாலானவை ஊழல் நிறைந்ததாகவும் பாராபட்சம் மிகுந்ததாகவும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இது மேற்குறிப்பிட்ட இலங்கையின் 1978ம் ஆண்டுக்கான யாப்பின் அடிப்படை மனித உரிமை வலியுறுத்தல்களை முற்று முழுதாக மீறுகின்றது. எனவே இதனை இவ் அரசாங்கம் எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகின்றது?

மேலும் காதி முறைமையானது முழுவதுமே அரசாங்கத்தின் பாதீடினூடாக வரி செலுத்துபவர்களின் வரிப்பணத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆகவே இதனைக் கேள்விக்குட்படுத்துவது அரசாங்கத்தின் கடமையுடன் இந் நாட்டு மக்கள் எல்லோரதும் பொறுப்புமாகும்.

ஆகவே முழுமையாக அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய விடயத்தை பொடுபோக்காக "இது சமூகத்தின் கருத்துச் சுதந்திரம்" என்று தட்டிக் கழிப்பது பொறுப்புக் கூறும் ஒரு அரசாங்கத்திற்கு முறையாகுமா? ஆகவே அமைச்சுப் பேச்சாளர் விஜித ஹேரத் பொறுப்பற்ற வகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேலும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன? அதாவது தேர்தல் விஞ்ஞாபனத்தில் " பெண்களுக்கு மற்றும் சிறுவர்களுக்கு பாகுபாடு காட்டுகின்ற மேலும் அழுத்தங்களுக்கு ஆளாக்குகின்ற சட்டங்களைத் திருத்துதல்", என்று கூறியிருக்க ஏன் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறான கருத்தை ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்?

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தேசிய மக்கள் சக்தி கட்சியானது முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறான மாயையான போக்கைக் கடைப்பிடிக்கின்றதா? கட்டாயம் தேசிய மக்கள் சக்தி கட்சியானது பாரிய அளவு பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்களினது வாக்குகளைப் பெற வேண்டுமாயின் பெண்களாகிய எங்களுக்குத் தெரிய வேண்டும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட திருத்தம் சார்ந்து தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன என்பதைத் தேர்தலுக்கு முன்பதாகத் தெரிவிக்க வேண்டும் அப்படி இல்லாமல் நழுவிப் போவீர்களேயானால் முஸ்லிம் பெண்களுக்கு பொறுப்புக் கூற முடியாத ஓர் ஆட்சியாகவேதான் உங்களது ஆட்சியும் அமையும்.

முஸ்லிம் விவாகரத்துச் சட்டம்: ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் | An Open Letter To President Anura Pm Harini

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தற்கு காரணம் ஏனெனில் தேசிய மக்கள் சக்தி கட்சியானது பாராபட்சமான கட்டமைப்புக்களை மறுசீரமைத்து எல்லோருக்கும் மாற்றத்தை உருவாக்கும் ஒரு கட்சியாக தங்களை பிரதிபலித்தமையால்.

கடந்த 40 வருடங்களாக ஆட்சியில் இருந்த எல்லாக் அரசியல்க் கட்சிகளும் இந்தச் சட்டத்தை ஆண்களுடன் மாத்திரம் கலந்துரையாடி எந்த திருத்ததிற்கும் உட்படுத்தாமல் இருந்ததே. இதே போல் தேசிய மக்கள் சக்தி  கட்சியும் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கட்டமைப்பு ரீதியாக இருக்கின்ற பாராபட்சங்களை முடிவுக்குக் கொண்டுவராமல் முஸ்லிம்களினது வாக்குகளிற்காக மாத்திரம் ஏனைய ஆட்சியாளர்கள் சென்ற வழியிலேயே கொண்டு செல்லப் போகின்றதா?

அப்படி நடக்குமாக இருந்தால் முஸ்லிம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் ஒரு விடிவு காலத்தைக் கொடுக்காத ஒரு ஆட்சி முறையைத்தான் நீங்கள் வைத்துள்ளீர்கள் என்பது நிரூபனமாகின்றது.

அப்படி இல்லை என்றால் வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பதாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கன் விமான சேவை விவகாரம் : கட்டுநாயக்கவிற்கு விஜயம் செய்த விஜித ஹேரத்

சிறிலங்கன் விமான சேவை விவகாரம் : கட்டுநாயக்கவிற்கு விஜயம் செய்த விஜித ஹேரத்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                      
GalleryGalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025