தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி : ஸ்ரீநேசன் எம்.பி புகழாரம்

Tamils Batticaloa London Journalists In Sri Lanka Gnanamuththu Srineshan
By Sumithiran Feb 24, 2025 05:14 PM GMT
Report

ஈழத்தாயகத்தில் இருந்து 1970 களில் லண்டன் சென்று அங்கு வாழ்ந்தவர் ஆனந்தி அவர்கள். அங்கு அவர் லண்டன் பிபிசி இல் ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பணியாற்றி இருந்தார். பிபிசி தமிழோசை மூலமாக ஈழத்தமிழர்களின் அவலங்களை உலகமெல்லாம் உரைத்தவர் சகோதரி ஆனந்தி. அவர் இலங்கை வானொலியிலும் ஆத்மார்த்த ரீதியாகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு (batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்(gnanamuththu srineshan) தெரிவித்துள்ளார்.

காலம் சென்ற ஊடகவியலாளர் ஆனந்தி தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வெறுமனே தொழிலாக ஊடகத்துறையை அவர் பயன்படுத்தவில்லை. அப்பணியை தமிழ்ப் பணியாக, தமிழர் பணியாக, அறப்பணியாக, அவர் பயன்படுத்தினார்.

மறைந்த மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்திற்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்

மறைந்த மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்திற்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்

மறைக்கப்பட்ட பல உண்மைகளை உலகத்திற்கு உரைத்தவர்

அவரது செய்திக்குரல் உரிமைக்குரலாக, உணர்வுக்குரலாக, உலகமெங்கும் ஒலித்தது. பாதிக்கப்பட்ட தாயகத் தமிழர்களின் அவலங்கள் உள்நாட்டில் தணிக்கை என்னும் தடுப்புகள் மூலமாக மறைக்கப்பட்டன. மறைக்கப்பட்ட பல உண்மைகளை உறைக்கக் கூடிய வண்ணம் உலகத்திற்கு உரைத்தவர் தான் சகோதரி ஆனந்தி.

தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி : ஸ்ரீநேசன் எம்.பி புகழாரம் | Anandhi Has Narrated The Tragedy Of Her Homeland

குரலற்ற ஈழத்தமிழர்களின் குரல்

குரலற்ற ஈழத்தமிழர்களின் குரலாக ஒலித்த ஆனந்தி அவர்களைத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். அதே போன்றவர்தான் விமல் சொக்கநாதன் அவர்களும், இவர்களது தமிழ்ப்பணிகளை, தமிழர் பணிகளை, என்றும் நாம் நெஞ்சில் சுமந்த வண்ணம் இருப்போம்.

தாயக அவலத்தைத் தரணியெல்லாம் உரைத்தவர் ஆனந்தி : ஸ்ரீநேசன் எம்.பி புகழாரம் | Anandhi Has Narrated The Tragedy Of Her Homeland

காலம் என்றோ எம்மைக் கவரும். கவரும் வரை அவரவர் ஆற்றிய பணிகள் காலத்தை வென்று நிற்க வேண்டும். அப்படித்தான் ஆனந்தி அவர்களது தமிழருக்கான பணியும் காலத்தை வென்று நிற்கும்.

சகோதரி ஆனந்தி நாமம், பணிகள் வாழ்க. அவரது ஆத்மா சாந்தி பெறுக. என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  

மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்!

மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026