அதிகரித்துள்ள வெப்பம் : விலங்குகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்
நிலவும் வறட்சியான காலநிலையுடன் நாய்களின் உடல் உஷ்ண அதிகரிப்பு காரணமாக அவற்றுக்கு மன அழுத்தம் மற்றும் நீர் பயம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி தெரிவித்தார்.
விவசாய கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முட்டை, பால் அளவில் குறைவு
தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கோழிகள் முட்டையிடுவது குறைவதுடன், நாளொன்றுக்கு மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் அளவும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.
கால்நடைகள் குறித்து அவதானம் தேவை
எனவே, வீடுகள் மற்றும் பண்ணைகளில் கால்நடைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்குதல், கால்நடைகளுக்கு காற்றோட்டம் கிடைக்கும் வகையில் கால்நடைகளை வளர்ப்பது, கால்நடைகளுக்கு தேவையான வைட்டமின்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |