யாழில் இருந்து புறப்பட்டது அன்னை பூபதி நினைவு ஊர்தி
Batticaloa
Jaffna
Tamil
By Kajinthan
அன்னை பூபதியின் 38வது நினைவாண்டினை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தியானது இன்றையதினம் நல்லூர் - தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.
இவ்வாறு புறப்பட்ட ஊர்தியானது வடக்கு - கிழக்கு முழுவதும் ஊர்வலமாக வந்து, இறுதி நாளில் மட்டக்களப்பில் உள்ள தியாகி அன்னை பூபதியின் சமாதி அமைந்துள்ள பகுதியை சென்றடையவுள்ளது.
பின்னர் அங்கு இறுதி நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.






| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |