பிரித்தானிய அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு பயணம்(படங்கள்)
இலங்கையில் இடம்பெற்ற இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் அமர்வில் பங்கெடுப்பதற்காக விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிவிவகார, மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன் மரி திரவில்லியன் இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ்சை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரைாயாடியுள்ளார்.
உயர்மட்ட சந்திப்புகள்
இலங்கையில் இடம்பெற்ற இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் அமர்வில் பங்கெடுப்பதற்காக விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிவிவகார, மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன் மரி திரவில்லியன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரைாயடியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சந்தித்து இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள், மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிபரின் காலநிலை ஆலோசகர் ரூவன் விஜயவர்த்தன மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்கவையும் சந்தித்து இலங்கையின் காலநிலை, சூரிய மின்சக்தி திட்டம், பசுமை பொருளாதாரம் ஆகியன குறித்து ஆராய்ந்துள்ளார்.
அத்துடன் இன்று காலை மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகரவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர் வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடிசார் சமூகம் மற்றும் உள்ளூர் வர்த்தக சமூகத்தையும் சந்திக்கவுள்ளார்.
அதன்பின்னர் முகமாலையில் உள்ள கண்ணிவெடி அகற்றும் தளத்துக்கும் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.