நாளை பாடசாலைகள் நடைபெறுமா..! கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது உறுப்பினர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம்(25) சுகவீன விடுமுறையில் பணிக்கு சமுகமளிக்க மாட்டார்கள் என கல்வி மற்றும் கல்விசாரா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சுகவீன விடுமுறை
இதன்படி, மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டம், வடமத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகியவற்றிலும் இதே தொழில் நடவடிக்கை நாளை நடைமுறைப்படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதே தொழில் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் திகதி மேல் மாகாணத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தமது சேவைக்கான சேவை அரசியலமைப்பை தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
பாடசாலை நடவடிக்கைகள்
ஆனால் பாடசாலை நடவடிக்கைகள் நாளை வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனைத்து ஆசிரியர், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களும் எதிர்வரும் 26ஆம் திகதி சுகவீன விடுமுறையை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin)செய்தியாளர் சந்திப்பு ஒன்றைக் கூட்டி, ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள வேறுபாட்டில் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கை வழங்காத காரணத்தால் சுகவீன விடுப்பு அறிக்கையிடும் தொழில் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்ததாகக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |