நாடாளுமன்றில் முன்னாள் அரச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு
இன்று நாடு எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்லாட்சி அரசாங்கமே மூலகாரணம் என ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் நாட்டு மக்களுக்காகவும் பாரிய சேவையை ஆற்றியுள்ளதாக முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
“சில விவாதங்களில் இந்த விடயங்கள் அனைத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் பக்கம் தள்ளப்படுவதை இந்த சபையில் நான் கண்டேன். இன்று நிலவும் பிரச்சனைகள் நல்லாட்சியின் போக்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் அல்ல, நீண்டகாலமாக எழுந்துள்ள பிரச்சனைகள் என்பதை நான் கூற விரும்புகின்றேன்.
திறந்த பொருளாதாரத்தின் பாதகமான விளைவுகளால் இன்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் நிதிகளின் தவறான மேலாண்மை, முறையான நிர்வாகம் இல்லாமை, அரசியல்வாதிகளின் தவறான நிர்வாகம், தேவையற்ற ஆடம்பரங்களை இறக்குமதி செய்தல், அடிப்படையில் 30 முதல் 40 ஆண்டுகால பிரச்சனை.
எனவே, இந்த நாட்டில் எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்ததும் முன்னைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்துவது வழமையான மரபு. எல்லா அரசுகளும் அப்படித்தான். ஆனால் அது ஒரு பாரம்பரிய முழக்கம். எனவே, நல்லாட்சி அரசாங்கத்திலும் இந்நாட்டு மக்களுக்காக பாரியளவிலான பணிகளைச் செய்துள்ளோம் என்றே கூற வேண்டும்.
குறைபாடுகள் இருந்தன.
நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.