குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற சுற்றுலா பயணி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
Sri Lanka Police Investigation
By Pavi
குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின் போது, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
10 லட்சம் அபராதம்
இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.

எனவே நீதிமன்றத்தால் குறித்த நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்