இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவித்தல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 120 எரிபொருள் நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்