இராணுவத்தளபதி வெளியிட்ட அறிவிப்பு
srilanka
shavendra silva
covid task force
By Sumithiran
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், இன்று முதல் அமுலாகும் வகையில் பசுமை விவசாயத்திற்கான செயற்பாட்டு மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், பசுமை விவசாயத்திற்கான மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சுக்கு இணையாக இந்த மத்திய நிலையத்தை கொண்டு செல்லவுள்ளதாகவும் இன்று முதல் குறித்த மத்திய நிலையம் கொவிட்-19 பரவலை தடுக்கும் செயற்பாடுகளிலிருந்து வேறாக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்