உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு வெளியானது!
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Local government Election
Sri Lankan local elections 2023
By Pakirathan
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைய செயல்படுவோம் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான அச்சகப் பணிகளுக்கு தேவைப்படும் நிதியை வழங்காதிருக்கும் நிதி அமைச்சின் செயற்பாட்டிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
இந்தநிலையில், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில், நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர் சார்பில் சட்டமா அதிபர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி