கோலாகலமாக நடைபெறும் றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா! மனம் திறந்த கந்தையா பாஸ்கரன்
தமிழர்களின் உணவு முறையே சற்று மாறுபட்டது. அதற்கு காரணம் “உணவே மருந்து மருந்தே உணவு” எனும் முறைதான்.
மேலும் அறுசுவை உணவுகளை ஒரே நேரத்தில் தமிழர்கள் உண்ணும் முறையை பின்பற்றுகின்றனர்.
குறிப்பாக இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்கள் வித்தியாசமும், நோயற்ற வாழ்வையும் தரக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.
இதன் ஒரு அங்கமாக கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவினால் பாரம்பரியத்தை கொண்டமைந்த உணவு திருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
கோலாகலமாக ஆரம்பமாகிய இந்த உணவு திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன் சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இந்த மாபெரும் உணவு திருவிழா ஏற்பாடு செய்தமைக்கான காரணம் தொடர்பிலும், தமிழர்களின் பாரம்பரிய உணவுபழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் குறித்தும் ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்காசிறி குழுமத்தின் தலைவரும் மற்றும் றீ(ச்)ஷாவ நிறுவனத் தலைவருமான பாஸ்கரன் கந்தையா கூறும் விடயங்கள் முக்கிய விடயங்களை எடுத்துரைத்துள்ளன..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
