புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
இன விடுதலைக்காக போராடிய நாங்கள் ஜனநாயகத்தின் பாதையில் இறங்கியுள்ளோம். எனவே மக்கள் பணிகளை முன்னெடுப்போம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் (Rehabilitated LTTE) தலைவர் கந்தசாமி இன்பராசா (K.Inparasa) தெரிவித்தார்.
திருகோணமலை (Trincomalee) நகர சபை மண்டபத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், “அடுத்து வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் வடகிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவோம்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டி
அத்துடன் ஜனநாயக போராட்டத்தில் இறங்கிய நாங்கள் மக்கள் தேவைகளை உணர்ந்து அடுத்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு செல்வோம்.
இம் முறை வடகிழக்கில் ஏழு மாவட்டங்களில் சுயேட்சையாக போட்டியிட்டோம் ஆனால் துரதிஸ்டவசமாக ஆசனங்கள் கிடைக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணிகளை முன்னெடுப்போம்.
வட கிழக்கில் கட்சியின் நிர்வாகப் பகுதியில் பல வெற்றிடங்களை நிரப்பியுள்ளோம். இதன் மூலம் முன்னாள் போராளிகள் இந்த ஜனநாயக நீரோட்டத்தில் இறங்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |