பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, கண்டி(kandy) மாவட்டத்தைச் சேர்ந்த 41 பாடசாலைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டியில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கண்டி வலயக் கல்வி அலுவலகம் சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாள் விடுமுறை
அதன்படி, கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகள் இதற்காகப் பயன்படுத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் நான்கு நாள் விடுமுறை வழங்கப்படும், மேலும் நிகழ்வின் போது வீதி போக்குவரத்தைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ஒரு மணி நேரம் வகுப்பு
தவறவிட்ட பாடசாலை நாட்களை ஈடுசெய்ய, பாதிக்கப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஏப்ரல் 28ஆம் திகதி முதல் ஐந்து வாரங்களுக்குள் ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வகுப்புகளை நடத்தும்.
கல்வி நடவடிக்கைகள் தொடர்வதை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாகாண வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தெரிவிக்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
