தியாகராஜா மகேஸ்வரன், பொன்சேகா மீதான தாக்குதல் குற்றவாளிகளின் விடுதலை தொடர்பில் வெளியான தகவல்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கோரிக்கைகளை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், மேலும் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளி
அதேசமயம், 2008 ஜனவரி 1ஆம் திகதியன்று கொழும்பின் இந்துக் கோவில் ஒன்றுக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளி விடுவிக்கப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்சேகாவைக் கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயற்சித்த குற்றவாளிக்கும் விடுதலை வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளியை விடுவிக்க விரும்புவதாக பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தாலும், அதற்கான கையொப்ப ஒப்புதலை பொன்சேகா இன்னும் வழங்கவில்லை என சொல்லப்படுகின்றது.
இது தொடர்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்னும் அவரிடம் கலந்தாலோசிக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

