பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு (Ministry of Education ) நேற்று (13.10.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி கம்பஹா (Gampaha) மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, கம்பஹா (Gampaha) மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு (colombo) கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு (Ministry of Education) இன்று (13.10.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், நாளை (14) களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மோசமான வானிலை
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, மாகாண கல்வி அதிகாரிகள் வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி இது குறித்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளம், கடும் காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
மேலும், பலத்த மழை காரணமாக கொழும்பு, களுத்துறை கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, காலி, குருநாகல், கண்டி, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |