பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
srilanka
return
student
telephone
belarus
By Sumithiran
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்டுள்ள நிலையில் எழுந்த பதற்றத்தை அடுத்து உக்ரைனில் உள்ள தமது குடிமக்களை மீட்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாடு செயற்பட்டு வருவதால் அந்த நாட்டின் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு வர விரும்பினால் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது குறித்த முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தை (00 79801445726) என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
