உக்ரைன் வாழ் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு
srilanka
ukraine
conflict
telephone numpers
By Jaso
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்து ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 00 90 534 456 94 98 அல்லது 00 90 312 427 10 32 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தூதரகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்கவும், பெற்றுக்கொள்ளவும் முடியுமென அமைச்சு கூறியுள்ளது.
உக்ரைனில் பதற்ற நிலைமை மேலும் அதிகரித்துச் செல்வதால், அங்கு வாழும் இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அங்காராவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.